Sunday, February 3, 2013

4:29 PM
பதின்மூன்று வயசில பள்ளிப்பருவத்தில பக்கத்து வகுப்பில
கடைக்கண்ணால் நான் பார்க்க.. அதே மொழியில் அவளும் பார்க்க …..
காதல்தான் என்று பெரிய மனிசன் தோரணையில் நினைத்திருக்க..

எனக்கு என் தோழர்கள் அவள் பெயரை சொல்லி கிண்டலடிக்க…
அவளுக்கு அவள் தோழிகள் என் பெயர் சொல்லி கிண்டலடிக்க …
வெட்கத்தில் நாங்கள் கூனி குறுகி மனதுக்குள் குதூகலிக்க ..
அய்யோ… லவ்வு..லவ்வு…லவ்வுதான்.. இரண்டே வருடம்தான் இப்படியே …
படிப்புக்காய் நான் வேறோர் இடம் செல்ல முதல் காதல் முற்றும் காதலானது.


பதினெட்டு வயசில உயர்தரத்தில் இருக்கையில்
ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்து படித்து பழகும்போது
ஒருவரையொருவர் அறியாமல் ஓர் இனிய உணர்வினை அனுபவிக்க காதலொன்றும் கண்டேன்.
எல்லாமே பரவசமாயிற்று இருவருக்கும் …

உடலும் உடலும் உரசிக்கொள்ள பரவசம் இன்னும் பரமானந்தாமாயிற்று …
பருவக்காதல், யார் கண்பட்டதோ?
பல ரூபங்களில் குழப்பம் ஏற்பட்டு பட்டுப்போச்சு.
ஒரு வருட காதல் ஒரு வார்த்தை சொல்லாமல் போய்விட்டது.



வேணாம்டா சாமி காதல் என்றிருக்கையில் அகவை இருபத்திமூன்றாகும்போது
தேடி தேடி வந்து தூண்டி என் விரதத்தை கலைத்தாள் ஒரு மாது.
அவள் அழகுதான் என்னை அதிகம் பாதித்தது.
கைப்பேசி சிம்பிளான காலமாகையால் பேசிப்பேசியே இருவருடம் ஓடிற்று..
வேலை கிடைத்தது வெளியிடம் சென்றேன்.. பேச்சு தொடர்ந்தது..
ஒருநாள் என் வீட்டில் சிக்கல் என்றார்கள்.. சமாளிக்கலாம் என்றிருந்தேன்…
அவளும் அதே சொன்னாள் …. மௌனமாகினேன்.
அவளோடு சேர்ந்து பறந்து போனது என் காதலும்.

இதற்கிடையில் ஒருநாள் காதல்கள் சிலவும் உண்டு.

இப்போது இருபத்தியேழாகிறது இனியும் எனக்கு காதல் வருமா ?

யாரோ ஒரு நண்பர் அரிவாளோடு ஒடிவருவது மாதிரி தெரியுது… எஸ்கேப் ஆகிறானுங்கோ.

0 comments:

Post a Comment