Saturday, March 16, 2013

எல்லோரும் ரெடியாகுங்க. எனக்கு யார் யாருக்கெல்லாம் குனிய வைச்சு குத்தணும் போல இருக்கென்ற லிஸ்ட்டை போடுறன். நீங்களும் உங்களுக்கு யாரைப் பார்த்தா குத்தணும் போல வருமென்கிற பட்டியலை தயார் படுத்திக்குங்கோ. சந்தர்ப்பம் கிடைச்சா குதறிடுங்க. வேறென்னத்ததான் சொல்றது. சில பேரை திருத்தவே முடியாது . பார்க்கிற நமக்கே பத்திகிட்டு வரும்.

மழை வரப்போகுது என்று தெரிந்திருந்தும் வெளியில் செல்லும்போது குடையை எடுத்து செல்ல மறப்பவர்கள். மழை வந்ததும் படும் அவஸ்தை இருக்கே சொல்லி மாளாது. ‘அச்சோ குடையை மறந்துட்டனே’ என்பார்கள். அதான் மறந்தாச்சே சொல்லி வேற காட்டணுமா? அவசரமாக போகவேண்டிய இடத்துக்கு கூட போகமுடியாமல் மழைக்கு ஒதுங்கி நின்னு யோசிக்கும்போது அவங்களை குத்தணும் போல இருக்கும் பாருங்க…பேங்க்குக்கு போய் சிலிப்பை கையில் எடுத்து சேட் பொக்கட்டில் கையை வைக்கும்போதுதான் தெரியும் பேனை எடுத்து வரவில்லை என்று. பரவாயில்லை என நினைத்துக்கொண்டு நூலில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் பேனையை நோக்கினால்; இன்னொருவர் எழுதிக்கொண்டிருப்பார். தலையை சொறிஞ்சுகிட்டே நிக்கும்போது பார்த்தா அந்த பேனைக்கு கையை நீட்டிகிட்டு நிக்கிற கிய+ வேற. சரியாக சிலிப் நிரப்ப தெரியாத ஆசாமியா இருந்தா ம்ம்.. இன்னும் சூப்பரா இருக்கும். அவங்களுக்கும் நிரப்பி கொடுத்து தானும் வேலையை முடிக்கும் வரைக்கும் இருக்கும் அவஸ்தை. பேசாம பேங்க்ல பத்து ரூபாய்க்கு ஒரு சிலிப் நிரப்புற வேலை செய்யிறத எவ்வளவோ தேவலாம். இந்தமாதிரியான ஜாம்பவான்களை பார்த்தால் கும்மாங்குத்து குத்தணும் போல இருக்கும்.


தேவையான ரசீதுகளையோ வேறு ஏதாவது டொகுமென்ட்டையோ வீட்டுக்கு வந்த வேகத்தில் மேசையில் தூக்கிப்போட்டுவிட்டு போவதும் இல்லாட்டா கண்ணுக்கு அம்புடுற எந்த இடத்திலாவது வைத்துவிட்டு பிறகு தேவை ஏற்படும்போது, தேடி அலுத்து மற்றவர்களுக்கும் ஏசித் திரியும் ஜத்துரிளிகளை கண்டால் காறித்துப்பணும் போல இருக்கும். பிறகுதான் குத்தணும்போல வரும். தமக்கு தேவையானதை ஒழுங்கு முறையில் வைத்திருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்றே தெரியவி;ல்லை.

வெட்டியா உட்கார்ந்துகிட்டு வாறவன் போறவன்கிட்டெல்லாம் தத்துவம், விமர்சனம், ஐடியா, அரசியல் எதிர்வு கூறல், அட்வைஸ் என ரவுண்டு கட்டிக்கொண்டிருக்கும்; ஆட்களின் பேக்கிரவுண்டை விசாரித்தால் ஒண்ணுத்துக்கும் உதவாத பயலா இருப்பான். மற்றவனை பார்த்து சொல்வார்கள் ‘அவன் இப்பிடி செய்திருந்தா முன்னேறி இருப்பான்’ அடங்கொய்யாலே அதை நீ பண்ணி முன்னேற வேண்டியதுதானேடா. எதுக்குடா வெட்டியா பேசிக்கிட்டுருக்க. இவங்களையெல்லாம் அந்நியன்கிட்ட சொல்லி கருடபுராணப்படி தண்டிக்கணும்.

காலையில வேலைக்கோ ஸ்கூலுக்கோ போறதுக்கு பஸ்ஸை மிஸ் பண்ணிருவோமோ என்று அரக்க பரக்க ஓடித்திரிபவர்களே! ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி அலார்ம் வைச்சு எழும்பி ஆறுதலா டென்சன் இல்லாம கடமைக்கு கிளம்பிறதால உங்க குடியாய்யா மூழ்கிப்போயிரும்.

கோயிலுக்கு போகணும்னு நினைக்கிற பொண்ணுங்க ப+வையும் அபிஷேகப் பொருட்களையும் தேடிறதுல காட்டாத ஆர்வத்தை நகையையும் ஆடம்பர ஆடைகளையும் தேடுவதில் காட்டுவது. பாவம் கடவுள் நல்லா ஏமாறுராரு


இப்பிடி குத்தவேண்டிய பட்டியல் நீண்டுகிட்டே போகுமுங்க. உங்களுக்கு தோணுறதை பதிவா போடுங்க. இல்லண்ணா இங்க கமெண்ட்டா அடிங்க.

‘போன் பண்ணணும், போனை காணல்ல எங்க வைச்சன?;’ ஹி..ஹி…ஹி…

13 comments:

 1. பதிவை படித்துவிட்டு comments போடாமல் போகிறவர்களை குத்தனும்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் எத்தனை பேர் கடுப்பாகி நம்மளை குத்த போறாங்களே தெரியல்ல

   Delete
 2. வலைச்சர அறிமுகம் மூலம் வந்தேன் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணே

   Delete
 3. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி , சந்தோஷம்

   Delete
 4. "காலையில வேலைக்கோ ஸ்கூலுக்கோ போறதுக்கு பஸ்ஸை மிஸ் பண்ணிருவோமோ என்று அரக்க பரக்க ஓடித்திரிபவர்களே! ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி அலார்ம் வைச்சு எழும்பி ஆறுதலா டென்சன் இல்லாம கடமைக்கு கிளம்பிறதால உங்க குடியாய்யா மூழ்கிப்போயிரும். (சரியாக சொன்னீர்கள்)"

  சீக்கிரமே போகணுமென்று One way யில் சென்று மல்லாக்க விழுந்து கிடக்கும் நாதாரிகளுக்கு உதவி செய்ய போறவர்களை கண்டால் தான் கொடூரமாக கோபம் வரும்.

  ReplyDelete
 5. நீங்க எப்போ சவுதி வந்தீங்க ,, என் பக்கத்தில் இருந்து நான் செய்வதையெல்லாம் அப்படியே எழுதி இருக்கிறிர்கள் .
  அதுக்காக நீங்க சொன்ன தண்டனை எல்லாம் வேண்டாங்க , நான் திருந்த முயற்சி பண்றேன் .

  ReplyDelete
 6. ஒவ்வொருத்தர்கிட்டயும் மிக சாதாரணமாக இருக்கிற பழக்கம்தான் இது. மாத்திகிட்டா ரொம்ப நல்லம். நான் மாறியிருக்கன். அந்த எதிர்பார்ப்புத்தான் பிரதர்.

  ReplyDelete
 7. உங்கள் கட்டுரை படித்த பின்பு மாற முயற்ச்சிக்கிறேன்.

  ReplyDelete
 8. குத்துங்க நண்பா குத்துங்க , இந்த மறதிகாரர்களே இப்படிதான்

  ReplyDelete
  Replies
  1. ஹா…ஹா… நான் மட்டுமல்ல நீங்களும் சேர்ந்து குத்தலாமிய்யா!

   Delete