Sunday, March 31, 2013

8:53 AM
2
நாங்கள் சுற்றுலா போவதென்றால் அஜன்டாவில் நிச்சயம் இடம்பிடிக்கும் ஓர் இடம்தான் நுவரெலியா. மலையகத்தின் மையப்பகுதி. அதிக வெப்பமின்றி சில்லென்றிருக்கும் குளிரும் நீர் வீழ்ச்சிகளும் அழகுற காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும்தான் அதற்கு காரணம். மலையகத்தின் மையம் மட்டுமல்ல இலங்கையின் மையப்பகுதியும் நுவரெலியாதான். அப்பிடியே இலங்கையை சுற்றிவந்து நுவரெலியாவில் ஐக்கியமாகும்போது கிடைக்கின்ற சுகமே தனி.

முக்கியமாக நுவரெலியா சுற்றுலா செல்பவர்களெல்லாம் செல்லும் குறிப்பிடத்தக்க இடங்கள் சில உண்டு. ரம்பொட அனுமர் கோயில். இது சரிவான மலைப்பகுதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் ஏறிச்சென்றால் அமைந்திருக்கும் அழகிய கோயில். அங்கே கோயிலின் கீழ்ப்புறத்தில் (குகை)அமைக்கப்பட்டிருக்கும் தியான மண்டபம்தான் பெஸ்ட். 
 
மற்றது சீதா எலிய ஆலயம். அதாவது இராவணன் சீதையை கடத்திகொண்டு வந்து சிறை வைத்திருந்த இடம் என்று கூறுவார்கள். பாறைகளில் பள்ளமாக இருக்கும் இடங்கள் அனுமரின் கால்தடங்கள் எனவும் வர்ணிப்பர். 

 
குதிரைப்பந்தய திடல் மற்றுமோர் சிறப்பம்சம். நீர்விழ்;ச்சிகள் கண்ணைக்கவர தேயிலைச்செடிகளின் வனப்பு எம்மை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
பரந்து விரிந்து கிடக்கும் தேயிலைச்செடிகளின் மத்தியில் நின்று போட்டோ எடுப்பதில் எல்லோருக்கும் அலாதி பிரியம். கொழுந்து பறிக்கும் பெண்களின் வேகமும் நுணுக்கமும் வியப்பை ஏற்படுத்தும். ஆனால் அவர்களின் வாழ்க்கையின் பின்னணியை சற்றும் யோசித்ததாக நினைவில்லை. எத்தனையோ தடவை சென்றிருந்தும் தேயிலையின் அழகை ரசித்திருக்கின்றேனே தவிர ஏனையவை பற்றி யோசிக்கவில்லை. பாலாவின் பரதேசி தான் ஒரு உலுக்கு உலுக்கிப்போட்டு. 
 
சின்னவயசில் மலையக எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை ஒன்றில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வியல் முறையினை படித்த ஞாபகம். அதில் நினைவில் நிற்பது சீமைக்கு செல்வோம் என ஆசை காட்டி நாடுவிட்டு நாடு அழைத்துவரப்பட்ட இந்தியத்தமிழர்களும் அவர்களுக்கு அமைத்துகொடுக்கப்பட்டிருந்த லயம் என்று சொல்லப்படுகின்ற தொடர்ச்சியான குடிசை வீடுகளும்தான். அப்போது அவை பற்றி தெளிவான புரிதல் இல்லை. ஏதோ புதுமாதிரியான வாழ்க்கையாக இருக்கிறதே என்று எண்ணியதோடு சரி. அதன் வேதனை புலப்படவில்லை.


ஒரு தடவை தேயிலை பக்ரரியில் தொழிலாளியாக வேலைபுரியும் ஒருவரின் வீட்டில் தங்கநேர்ந்தபோது அவர்களது வாழ்க்கைமுறைமை சற்று சங்கடத்தையே ஏற்படுத்தி நின்றது. அவர்கள் அதற்கு பழக்கப்பட்டவர்களாக மகிழ்ச்சியாகவே சீவியம் நடத்துகின்றனர். பாலா படம் தந்த மெசேஜ் கண்டிப்பாக ஒருதடவை மலையகம் சென்று அழகை ரசிக்காமல் அங்குள்ள மக்களின் வாழ்வை பற்றி ஆராயவேண்டும் என ஆர்வம் மேலோங்கி நிற்கின்றது. இது சின்ன அறிமுகம் விரைவாக மலையகம் சென்று திரும்பியவுடன் விரிவாக இதைப்பற்றி பேசலாம்.

சிந்திக்க வைத்த பாலாவுக்கு நன்றிகள்.

2 comments:

  1. 16 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத்தில் ஆசிரியராகக் கடமை புரிந்திருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை தொடர்பான சோகம் எப்போதும் என் மனதில் உண்டு. இப்போ அவர்களின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. 16 வருடங்க்களுக்கு முன்பு மலையகதில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை தொடர்பான சோகம் எப்போதும் என் மனதில் உண்டு.

    ReplyDelete