நான்; முன்பே சொல்லியிருந்தேன். நமக்கு நிறைய லவ்வு வந்துச்சு. சிலது ஓடிச்சு. நிறைய பிளாப் ஆயிருச்சு. அப்பிடி சக்ஸஸா ஓடின ஒன்றுல நடந்த இனிமையான அனுபவம்தான் இந்த பதிவு.
ஏப்ரல் மாத சீசன். எப்போதாவது ஒருநாள் மழை பொழியும் காலம். அன்றும் அப்படித்தான். மதியம் கடந்து மூன்று மணிபோல் சில்லென்று காற்று வீச கருமேகங்கள் வேகமாக ஒன்றுகூடி மழை பெய்ய ஆரம்பித்தது. மண்வாசம் மெதுவாக சுவாசத்தில் கலந்தது.. அப்போது நான் நண்பன் வீட்டில் நின்றிருந்தேன். மழை தரும் இன்பத்தை அனுபவித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். நேரம் கடந்துகொண்டிருந்தது. நான்கு மணிபோல நண்பனின் தாயார் தந்த பிளேன் டீ அப்பப்பப்பா…. மழைக்க இதமாக…சூப்பர். சின்ன தூறல் பெரிய பொழிவு என மழை விட்டபாடில்லை. ஐந்து மணிபோல் என் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. போனைப் பார்க்கிறேன். புது நம்பர். “யாரா இருக்கும்?” நினைத்துக்கொண்டே ஆன்ஸர் பண்ணினேன்.
“ஹலோ”
“ஹலோ, எங்க நிக்கிறியள்?” ஆஹா லேடி வாய்ஸ்.
“நீங்க?”
“ஓ..நானா.. உங்க பாட்டி”
ஐயோ. நான் எதிர்பார்க்கவேயில்லை. குரலை கூட அடையாளம் காணமுடியவில்லை. இப்போதுதான் புரிந்தது. பேசுறது நம்ம ஆள்தான். குரல் அடையாளம் தெரியாததற்கு ஏதாவது சொல்வாளோ என நினைத்துக்கொண்டே வெளியில் வந்து வீட்டின் பின்புறத்துக்கு ஓடிவந்து.
“என்ன புது நம்பர்ல இருந்து. யாரோடது?”
“இது அப்பா போன்”
“அப்பா எங்க?”
“வீட்ல யாரும் இல்ல. எல்லோரும் வெளியில.. மழையால போனை வைச்சுட்டு போயிட்டார்”
“என்னது யாருமில்லையா? அப்ப அங்க வரட்டுமா?”
“வேணாம்.”
“ப்ளீஸ்.. பளீஸ்;…ப்ளீஸ். அஞ்சே நிமிசம்தான்;”
“ம்ம்.. சரி. அரை மணித்தியாலத்துல வந்துருவாங்க. அதுக்குள்ள வந்து போயிரணும்.”
“ இந்தா இப்போ வாறன்” போனை கட் பண்ணிட்டு குடையை எடுத்துக்கிட்டு கிளம்பையில்
“எங்கடா மழைக்குள்ள போறாய்” நண்பன் கேட்க “வீட்ட கொஞ்சம் போயிட்டு வாறன்” என்றபடி ஓடினேன்.
“ங்ஆ… எந்த வீட்ட… போடி.. போ.. கட்டி வைச்சிருப்பானுகள். காப்பாத்த வாறம்”
ஆஹா கண்டுபுடிச்சிட்டான் பயபுள்ள. பின்ன போனை தூக்கிட்டு ரன்னிங் பழகினா கண்டுபுடிக்காம என்ன பண்ணுவான். மழையின் உக்கிரத்தையும் பொருட்படுத்தாது சைக்கிளை தள்ளி மிதிக்க தொடங்கினேன். கொங்கிறீட் வீதி பரவாயில்லை. கிறவல் வீதியையும் கடக்க வேண்டியிருந்தது. மழையில் பட்டு சின்னபின்னமாகியிருந்த கிறவல் வீதிகள் என்னை ரொம்பவே கஸ்டப்படுத்திப்போட்டு. காதலின் வேகம். பெண்ணின் மீது கொண்ட மோகம் எல்லாத்தடையையும் சுக்கு நூறாக்கிற்று.
அவங்க வீட்டு ஏரியா அவ வீட்டை நெருங்கையில் அக்கம் பக்கம் திரும்பி பார்க்கிறேன். யாருமில்லை அவள் மட்டும் வீட்டு கதவோரம் வெளியில் எட்டி பார்த்தபடி நின்றாள். அந்த பொசிசன் ,பார்வை எனக்கு மேலும் உத்வேகம் அளித்தது. அவள் வீட்டை கடந்து நூறு மீற்றர் தொலைவில் இருந்த ஒரு மரத்தில் சைக்கிளை சாத்திவிட்டு (எல்லாம் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்), வேகமாக வந்து வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். நான் உள்ளே போனதும் அவள் கதவை ப+ட்டிவிட்டாள்.
“யாரும் பார்த்திட்டாங்களா?” என்றேன்.
“இல்லை”
“ஒருத்தரும் வரமாட்டாங்களா?” பார்க்கிறதுக்கு பெரிய பருப்பு மாதிரி இருந்தாலும் நமக்கு கொஞ்சம் அஸ்திவாரம் வீக். அந்த பயத்திலதான் இந்த கேள்வியெல்லாம். வரும்போது நண்பன் கூட பயம் காட்டிற்றான்.
“வந்தா என்ன. இங்க எங்காவது ஒரு மூலைக்குள்ள ஒளிஞ்சிக்குங்க. இல்லாட்டி பின்பக்க கதவால போய் வேலிக்குள்ளால புகுந்து போங்க” பயமோ பதட்டமோ இல்லாமல் சொல்லிக்கொண்டே ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சத்தம் குறைவாயிருந்த டி.வி யை பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த தேவதை.
“என்னது. வேலிக்குள்ளாலயா… நான் என்ன கோழிக்கள்ளனா?”
“ம்..கிட்டத்தட்ட அப்பிடித்தான்”
என்னடா இவ நம்மள வரச்சொல்லிட்டு டி.வியை பார்த்துட்டு நிக்கிறாளே. என்று யோசித்தாலும் அது அப்படியில்லை. பெண்களின் சிறப்பம்சமே அதுதான். டி.வி யில் என்ன போகுதென்றே அவளுக்கு தெரிந்திருக்காது. அப்படி ஒரு பரவச நிலையில் மிதந்துகொண்டு என்னையும் அவள்பால் ஈர்க்கும் ஒரு நடவடிக்கையே அது. உண்மைதான். உதட்டை சுழட்டியபடி ரிமோட்டால் கன்னத்தை தடவிக்கொண்டிருந்த அவள் அழகு எனக்கு பயத்தையும் தாண்டி இதுவரை அறிந்திராத புது இன்பத்தை அளித்தது. சிந்திக்க முடியவில்லை. உடல் லேசான நடுக்கம் கொண்டது.
“நீ ரொம்ப அழகா இருக்க”
பதில் சொல்ல தெரியவில்லை. அவளை தனியாக வெளியில் சந்திப்பது முடியாத காரியம். அவ்வளவு இறுக்கமான சூழ்நிலை. “அவதிபட்டு வீடு வரைக்கும் வந்தாச்சு. ஒரு கிஸ்ஸாவது அடிக்கலன்னா எப்பிடி” மனம் எனும் மாயை என்னை தூண்டியது. “அப்பிடியே கன்னத்தில் நச்சுன்னு கிஸ் பண்ணிட்டு பேசாம நின்னா எப்பிடி இருக்கும்.” ஐடியா வருதே தவிர நிறைவேற்ற திராணியில்லை. அவள் என் பக்கம் லேசாக திரும்பி கண்ணால் “என்ன?” என்றாள். இதுக்கு மேல என்னால முடியல்ல. மழை வேற கடுப்பேத்துது. சட்டென்று கையை புடிச்சிகிட்டேன். அம்மாடி..என்ன சுகம். படபடப்பு. என்ன தவம் செய்தேன் காதலித்தவள் கரம்பிடிக்க. இனி மெல்ல அடுத்த கட்டம் நகரலாம் என்று நினைக்கையில். சுவர்க்கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவள்..
“இங்க டைம பாருங்க. அஞ்சு நாற்பது. அம்மா வந்துருவா. போங்க போங்க” என்று சிணுங்கி தள்ளிவிட்டாள் பாருங்க எல்லா மூடும் போயி பழையபடி பயம் தொத்திகிச்சு.
“கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருக்கலாமே” அப்பாவித்தனமாய் நான் சொல்ல “அடுத்த தடவை பார்ப்பம்” என்றவள் கதவை திறந்து வெளியில் பார்த்துவிட்டு “ஒருத்தரும் இல்லை. போங்க” எனறாள்.
சலித்த மனத்துடன் மரத்தில் இருந்து சரிந்து விழுந்து கிடந்த சைக்கிளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சே.
ஆஹா ஒரு நிஜத்தின் பதிவு சும்மா ஜில்லென்று மனசை குடைந்து போகுது ,,,பின்ன நமக்கும் இப்படி சீன வந்துதானே போச்சு,,,,அது ஒரு காலம் அழகிய காலம்.....
ReplyDeleteமிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றிங்கண்ணா, இதை வெளியில சொன்னதுக்கப்புறம்தான் எல்லோரும் “அந்த ஆள் யார்ரான்னு” கண்டுபிடிக்க வெளிக்கிட்டாங்கள். சிக்கி சின்னாபின்னமாயிட்டிருக்கன்.
ReplyDelete