Saturday, February 23, 2013

11:22 AM
2

“சங்கர்… சங்கர்.. என்ன ஆளைக்காணோம். ங்ஆ… அதானே பார்த்தன் போனா? அவசரமா வந்திருக்கன்டா கொஞ்சம் கட் பண்ணிட்டு வா.”

என்னோட பிரண்டுங்க சங்கர். ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்கான். இப்ப அவ கூடதான் பேசிக்கிட்டு இருக்கான். எப்பிடி கண்டுபிடிச்சன் எண்டு கேக்கிறீங்களா? ஒரு ஒதுக்கப்புறமா இரண்டு கதிரையை போட்டு, ஒரு கதிரையில இருந்து மறுகதிரையில் காலை தூக்கி வைத்துக்கொண்டு, லேசாக காலை ஆட்டியபடி சத்தமே வராமல் பேசினால் நிச்சயமாக அது பொண்ணுதாங்க. எத்தனை பேரை பார்த்திருக்கம்.

“என்ன அவசரம்டா? வேகமாக சொல்லும்.”

“அப்பாடா! கட் பண்ணிட்டு வந்திட்டியா.. என்னண்ணா மச்சான் நான் பதிவு ஒண்ணு போடலாம்னு இருக்கன். அதுக்கு உன்ர உதவி கொஞ்சம் தேவை.”

“என்ன பதிவு? என்ன உதவி?”

“அதாவது லவ் பண்ற பசங்களும் பொண்ணுகளும் விடாம தொடர்ச்சியாக போன் பேசிட்டே இருக்காங்கதானே. அவங்க என்ன பேசிக்குவாங்க. என்கிற சப்ஜெக்ட். சப்ஜெக்ட் நல்லா இருக்கா?”

நண்பன் லேசா கடுப்பான மாதிரி தெரியுது.



“அதுக்கு என்ணை என்ன பண்ணச்சொல்ற?”

“ஒண்ணுமில்லை. ஓண்ணுமில்லை. நான் சில கேள்விகள் கேட்பன். நீ பதில் சொன்னாலே போதும்”

“இல்லை என்று சொன்னால் விடவா போற. சரி கேளு”

“ முதல் கேள்வி காலையில எத்தனை மணிக்கு போன் வரும்? எவ்வளவு நேரம் கதைப்பீங்க? எது சம்பந்தமா கதைப்பீங்க?”

“முதல் கேள்வின்னு சொன்னாய், மூணு கேள்வி கேக்கிறாய்? த்ரீ இன் வன்னா?”

“ஆமா”

முணுமுணுத்துக்கொண்டே ஆரம்பித்தான் நண்பன்.

“காலையில ஒரு.. அஞ்சரைக்கு கோல் பண்ணுவா. குட்மோர்னிங் சொல்லி.. நைற் தூக்கத்தை விசாரிச்சு….அன்றைய புரொக்கிராம அவ கேட்டு… நான் சொல்லி.. நான் கேட்டு.. அவ சொல்லி…காலைக்கடன்களையும் விசாரிச்சு… ஒரு ஆறரை வரைக்கும் பேசுவம்”


“ஓகே. ஓகே . வெரிகுட். வண் அவர் இதுக்கு தேவைதான். அப்புறம் எப்ப போன் வரும்? அல்லது நீங்க எடுப்பீங்க? எவ்வளவு நேரம்? எத்தனை மணிக்கு ஓவ் ஆகும்? எல்லாத்தையும் ஒரே தடைவையில சொல்லிரு..”



“ஆறரைக்கு வேலைக்கு போக ரெடியாகி, எட்டரைக்கு ஆபீஸ் போன உடனே போன் வரும். போய் சேர்ந்தீங்களா? சாப்பிட்டிங்களா? அப்பிடின்னு ஒரு பதினைஞ்சு நிமிசம். அப்புறம் நாலு மணிவரைக்கும் லஞ்ச் ரைம் எல்லாம் சேர்த்து ஒரு நாலு தடவை போன் எடுப்பன் இல்லேண்ணா வரும். அதுல ஒரு ஒண்டரை மணித்தியாலம் போகும். இனி வீட்டுக்கு வந்தா , பத்திரமாக வந்ததை தெரிவிக்க ஒரு கோல். பிறகு பிரெஷ்ஷாயிட்டு பத்து மணிக்குள்ள ஒரு ரெண்டு மணித்தியாலம் பேசுவம். அவ்வளவுதான்.”

“ சரி நண்பா, பிறகு என்ன பேசுவிங்க எண்டு சொல்லவேயில்லையே?”

“என்னத்தை சொல்றது.. சும்மா வீட்டுக்கதை ..ஊர்க்கதை.. நண்பர்கள் கதை.. அலுவலக கதை …அப்பிடின்னு போகும்” 

“ அப்ப இடையில அந்த மேட்டர் எல்லாம் பேசமாட்டியலா?”

“எனக்கு தெரியும் நீ எதை எய்ம் பண்ணி வருவாண்ணு.. எழும்பி ஓடிப்போயிரு”

நண்பன் இனி சொல்ல மாட்டான் மேட்டரை மாத்துவம்“ சரி அதைவிடு. உங்களுக்குள்ள ஒளிவு மறைவு இருக்குமா?”

“எவ்வளவு நேரம் கதைக்கிறம். அப்பிடியிருக்க சான்ஸே இல்ல”

“அப்ப தண்ணியடிக்கிற ரைம்ல போன் பேச முடியாதே. அப்ப அதெல்லாம் முன்கூட்டியே சொல்லிருவியா? இல்லை வேற பிளானா?”

“அதுல எப்பிடின்னா.. சில நாள்ல சொல்ற.. சில நாள்ல சொல்றயில்ல.”
“ ஏன் அப்பிடி?” எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகமாகிவிட்டது.



“இப்ப தண்ணியடிக்கிறத சொல்லாட்டா, அவ எப்பிடியாவது அறிஞ்சுகிட்டு கேட்டான்னா.. லவ்ல விரிசல் விழுந்துரும். தண்ணியடிக்கிற எல்லா ரைம்லயும் சொன்னால், பயங்கர குடிகாரனா நினைச்சுரும். அதுவும் வல்வுக்கு பிரச்சினை. அதனாலதான் இந்த ரிக்”

“சரி… மாசம் எத்தனை நாள்றா தண்ணியடிப்ப?”

“டேய்.. அது உனக்கு தெரியும்தானே, என்கூட நீயும்தானே இருப்ப”

“அய்யய்யோ! நீ தேரை இழுத்து தெருவில விட்டுருவா போல இருக்கே. நான் வாறன்டா சாமி” ஓடியே வந்துட்டன்.

என்னலா முடியலிங்க.. இவன் ஒருத்தனே பேட்டிக்கு போதும். வேலை செய்யிற இவனே இப்பிடின்னா…. வேலை இல்லாத பசங்க …. நினைக்கவே பயமா இருக்கு.

இதை வாசிச்சு போட்டு எத்தனை பேர் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறாங்களோ தெரியல்ல.

2 comments:

  1. //டேய்.. அது உனக்கு தெரியும்தானே, என்கூட நீயும்தானே இருப்ப//
    உங்களுக்குத்தான் காதலி இல்லையே.அப்புறம் என்ன தைரியமா சொல்லுங்க மாசத்துல எத்தனை நாள் தண்ணி அடிப்பீங்க?.இல்ல மாசத்துல என்(றை)னைக்கு தண்ணி அடிக்க மாட்டீங்க?

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ் , சங்கர்கிட்ட இருந்து தப்பினாலும் நீங்க விடமாட்டிங்க போல. வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்ட கதையாப்போச்சு என் நிலைமை.

      Delete