Sunday, March 24, 2013

1:16 PM
4
இந்த உண்மையை நான் கட்டாயம் சொல்லியே ஆகணும். சத்தியமாக சொல்றன் நீங்கெல்லாம் நினைக்கிற அளவுல அரைவாசி கூட கம்ப்ய+ட்டர் அறிவு எனக்கில்லை. சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் என் சித்தப்பா பாரின்ல இருந்து கொண்டுவந்து தந்தார். இப்போ எல்லாம் கம்ப்ய+ட்டர் கட்டாய தேவையாயிருச்சு படிச்சு பழகிக்கோங்கோ என்ற நல்லெண்ணத்தில் தந்நவருக்கு தெரியாது எனக்கு கம்ப்யீட்டர் பத்தி கேள்ளிப்பட்டதோட சரி இப்பதான் தொட்டு பார்க்கிறன் என்று.

கம்ப்யீட்டர் பாகங்கள் எல்லாத்தையும் பிரிச்சு வைச்சிட்டு கேபிள்களையும் பிரிச்சி எடுத்துட்டு அசம்பிள் பண்ண ரெடி.  ஆர்வக்கோளாறு எதைப்பத்தியுமே யோசிக்கல்ல. கேபிள் மாட்டக்கூடிய துவாரங்களை இனங்காண்பது கொஞ்சம் சுலபமாகத்தான் இருந்தது. காரணம் அதன் வடிவமைப்பு மற்றும் கலர்கள். ஒருமாதிரியாக அசம்பிள் பண்ணியாச்சு. பிளக்ல பவர் ஒண்ணும் செய்தாச்சு. கருமம் கம்ப்ய+ட்டர்ல எது சுவிச்சுன்னு தெரியாது. இரண்டு சுவிச் இருக்கு. மாறி அழுத்தினா பழுதாயிடுமோ என்கிற பயம் வேற. மனதை திடப்படுத்திக்கொண்டு சரியான சுவிச்சைதான் அழுத்தினேன் . விண்டோஸ் மியூசிக்கோடு பச்சை புற்தரை வால்பேப்பரோடு கம்ப்ய+ட்டர் சிரித்தது. ஹைய்யா.. ஒண்ணாயிருச்சு. படங்கள்ல பார்த்த ஞாபகம் மௌசை பிடித்து மெது மெதுவாக வேலை செய்ய தொடங்கினேன். ஓபன் பண்ணுவது பின்னர் குளோஸ் பண்ணுவது. கொஞ்ச நேரம் இப்படியே போயிட்டுது. அப்புறம் பீதோவன் மியுசிக் மீடியா பிளேயரில் ஒலித்ததும் டபுள் சந்தோசம்.

இப்படியாக நாட்கள் சில கடந்ததும் விசிடி போட்டு படம் பார்ப்பதை கத்துக்கிட்டேன். இப்போ ரிவிக்கு பதில் கம்ப்யீட்டர் என்ற நிலைமை ஆகிவிட்டது. பிற்பாடுதான் மைக்ரோசொப்ட் புரொக்கிராமுக்குள் போய் மெது மெதுவாக ரைப்பிங்க் மேட்டர் எல்லாம் கத்துக்கிட்டேன். வேலை கிடைத்த பிறகு அலுவலகத்தில்தான் எக்ஸல் கத்துக்கிட்டேன். எல்லாமே நானாக கத்துக்கிட்டதுதான். கம்ப்ய+ட்டருக்கென்று இதுவரை ஒரு நிமிட கிளாஸ் கூட சென்றதில்லை. பதிவு போடறதும் இப்படித்தான் காதால் கேள்ளிவிப்பட தட்டுத்தடுமாறி ஒருமாதிரி ஒப்பேத்தியிருக்கன். இமேஜெல்லாம் கூகுளண்ணன் தந்துதவுவார். அவருக்கு இந்த பதிவிலேயே எல்லாத்துக்கும் சேர்த்து நன்றி தெரிவிச்சிக்கிறன். அப்புறம் யாரும் உரிமம் பிரச்சினையை கிளப்பி சண்டைக்கு வரப்படாது. ஏன்னா நாங்கெல்லாம் திருடினாலும் டீசென்டா சொல்லிட்டு திருடற ஆக்கள். இதுவரைக்கும் என்ன நடந்திருக்கென்றே எனக்கு தெளிவில்லை. எனது வலைப்பக்கத்தை பார்க்கின்ற நண்பர்கள்தான் தயைகூர்ந்து தவறுகளை சுட்டிகாட்டி கற்றுத்தர முன்வரவேண்டும் என பகிரங்க அழைப்பு விடுக்கிறேன். ஆனா ப்ரீயாத்தான்.

நம்மளை மாதிரி எத்தனை பேர் படம் பார்க்கிறங்க மட்டும் இருக்காய்ங்களோ தெரியல்ல.

4 comments:

  1. ஹா... ஹா... இது போல் தெரிந்தால் போதுமுங்க...!@!

    ReplyDelete
  2. குதம்பை,
    குயில்,
    குரவை,
    குறத்தி,
    கூடல்,
    கொச்சகச் சார்த்து,
    கோத்தும்பி,
    கோழிப் பாட்டு,
    சங்கு,
    சாயல் வரி,
    சார்த்து வரி,
    சாழல்,
    செம்போத்து,
    தச்சராண்டு,
    தச்சாண்டி,
    தாலாட்டு,
    திணைநிலைவரி,
    திருவங்கமாலை,
    திருவந்திக் காப்பு,
    தெள்ளேணம்,
    தோணோக்கம்,
    நிலைவரி,
    நையாண்டி,
    பகவதி,
    படைப்பு வரி,
    பந்து,
    பல்லாண்டு,
    பல்லி,
    பள்ளியெழுச்சி,
    பாம்பாட்டி, பிடாரன்,
    பொற்சுண்ணம்,
    மயங்குதிணை
    நிலைவரி,
    முகச்சார்த்து,
    முகமில் வரி,
    முகவரி,
    மூரிச் சார்த்து,
    வள்ளைப்பாட்டு முதலியனவற்றை நன்றாக ஆழமாக படித்துவிட்டு தினமும் ஒரு பதிவா இடுவேன். வாரவுக வந்து சத்தை இளப்பாறி பின் அவற்றைப் பற்றி படித்துவிட்டு யோசிப்பாங்கள்ள.

    இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து,சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே. அவற்றைப் பற்றியும் கொஞ்சம் சொல்லேன் தம்பீ

    ReplyDelete
  3. டீவியை ஏன் ரீவி என இலங்கைத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள்? உண்மையாக சொல்லப் போனால் ’டீ” என்பதை ‘ரீ” என்றே சொல்லக் கேட்கிறது! ஏன் என்று யாரும் சொல்லுங்களேன்

    BTW...it really annoys non sri lankan tamil people!

    ReplyDelete
  4. உரிமம் பிரச்சனை பற்றி எனக்கும் கொஞ்சம் சொல்லித் தாருங்களேன். என் கட்டுரைக்கும் படங்கள் இணைக்க ஆசை. ஆனால் தயக்கமாக இருக்கிறது.

    ReplyDelete