உண்மையாயிருத்தல்
இந்த வார்த்தையை தப்பாகவே புரிந்து
கொண்டுள்ளான் நண்பன்
என்னவென்று?...
காதலிக்கிறான். சில வருடங்களாய்
எமக்குள் ஒளிவில்லை என்பான் அவன்
ஏழு கடல் மலை தாண்டியும் காண முடியா
புனிதக்காதல் என்பாள் அவள்
அம்மிக்கும் குழவிக்கும் இடையில்
அகப்பட்ட புழுவாக நான்
தலை தப்ப நினைத்தாலும்
உதவாத தோழன் என்ற பட்டம்
காதலித்தால் இப்படித்தானோ?
காதலித்து பார்ப்போமோ? (உண்மையாக)
விஷப் பரீட்சைக்கு தயாரானதுமுண்டு
நேற்றைய சம்பவம் வரை.
இந்த வார்த்தையை தப்பாகவே புரிந்து
கொண்டுள்ளான் நண்பன்
என்னவென்று?...
காதலிக்கிறான். சில வருடங்களாய்
எமக்குள் ஒளிவில்லை என்பான் அவன்
ஏழு கடல் மலை தாண்டியும் காண முடியா
புனிதக்காதல் என்பாள் அவள்
அம்மிக்கும் குழவிக்கும் இடையில்
அகப்பட்ட புழுவாக நான்
தலை தப்ப நினைத்தாலும்
உதவாத தோழன் என்ற பட்டம்
காதலித்தால் இப்படித்தானோ?
காதலித்து பார்ப்போமோ? (உண்மையாக)
விஷப் பரீட்சைக்கு தயாரானதுமுண்டு
நேற்றைய சம்பவம் வரை.
பிரிந்துவிட்டார்களாம். அய்யகோ !
காதலின் இலக்கணமாக அல்லவா
உங்களை நினைத்திருந்தேன்
உங்களை பார்த்து நானும்…. அடச்சீ
நண்பன் தன்னிடம் உண்மையாய்
நடக்கவில்லை என்ற அவளின்
ஆதங்கம் நிரம்பிய, எதிர்பார்ப்புகள்
தவிடிபொடியாகிய காரணத்தை தேடி நான்.
அவள் சொன்னது உண்மைதான்
மற்றவரின் அந்தரங்கங்களையும,; நம்பி சொல்லும்
இரகசியங்களையும் காதலியிடம் சொல்வதுதான்
உண்மையாயிருத்தல் என நினைத்திருக்கிறான்
இவன் JEMO ஆளாக இருப்பானோ?
தன்னுடைய அந்தரங்கங்களையும் இரகசியங்களையும்
தெரியப்படுத்துவதுதான் காதலில் உண்மையாயிருத்தல்
என்பதை அறியாமல் இருக்கிறான்
காதலின் இலக்கணமாக அல்லவா
உங்களை நினைத்திருந்தேன்
உங்களை பார்த்து நானும்…. அடச்சீ
நண்பன் தன்னிடம் உண்மையாய்
நடக்கவில்லை என்ற அவளின்
ஆதங்கம் நிரம்பிய, எதிர்பார்ப்புகள்
தவிடிபொடியாகிய காரணத்தை தேடி நான்.
அவள் சொன்னது உண்மைதான்
மற்றவரின் அந்தரங்கங்களையும,; நம்பி சொல்லும்
இரகசியங்களையும் காதலியிடம் சொல்வதுதான்
உண்மையாயிருத்தல் என நினைத்திருக்கிறான்
இவன் JEMO ஆளாக இருப்பானோ?
தன்னுடைய அந்தரங்கங்களையும் இரகசியங்களையும்
தெரியப்படுத்துவதுதான் காதலில் உண்மையாயிருத்தல்
என்பதை அறியாமல் இருக்கிறான்
.jpg)

0 comments:
Post a Comment