Sunday, May 19, 2013

10:56 AM
15

வழக்கமாக அலுவலகத்திற்கு நானும் நண்பனும் மோட்டர் பைக்கில் சென்று வருவோம். 45 கிலோமீட்டர் தூரம். செலவை பங்கிட்டுகொள்வதற்காக வாரத்தில் பாதி நாட்கள் எனது பைக்கிலும்; மீதி நாட்கள் நண்பன் பைக்கிலும் செல்வது வழமை. நான்கு நாட்கள் முன்பு நண்பனின் டேண். பத்து நிமிடம் லேட்டாகிவிட்டது. சரியாக 07.30 க்கு வண்டியை ஸ்டார்ட் செய்தால் 08.30 க்கு அலுவலகத்தில் நிற்போம். டிராபிக் கூடிய பிரதேசங்களை கடக்கவேண்டி இருப்பதனால் சரியாக ஒரு மணிநேரம் ஆகும். அன்று 07.40 ஆகிவிட்டிருந்தது. ஏன்டா லேட்டுன்னு நான் கேட்டிருக்கக்கூடாது. ஏனென்றால் அது அடிக்கடி நடக்கிற விசயம். காலையில எழுந்திருக்க லேட்டாகிறது. இருந்தாலும் கன்பார்ம் பண்ணிகிட்டேன்.

டன்டடைன்..ப்ளாஸ்பேக் . சரி அந்த களத்துக்குள்ளேயே செல்வோம்.

பைக்ல ஏறினதுதான் தெரியும். அக்ஸிலேட்டரை முறுக்கின முறுக்கில் ஒரு உலுக்கு உலுக்கியது. என்னடாது வழக்கமாக அவ்வளவு வேகமாக நாங்கள் வண்டி ஓட்டுவதில்லை. அது ஒரு நல்ல பழக்கமாகவே வைச்சிருக்கிறம். ஆனா இன்னிக்கு இப்பிடி ஸ்பீட்டா ஓட்டுறானே. என்னாச்சு இவனுக்கு?. சிந்தித்துக்கொண்டே இயர்போனை காதில் மாட்ட முயற்சிக்கிறேன். முடியவில்லை வேகம் காரணமாக காற்று அழுத்தத்தினால் பலன்ஸ்ஸாக இருந்து மாட்ட முடியவில்லை. அப்பிடியே மெதுவாக மீற்றரை எட்டிபார்க்கிறேன். நோர்மலா 60 ஐ தாண்டி போனது கிடையாது. இன்னிக்கு அதீத வேகம்தான். எத்தனை கிலோமீட்டர்/அவர்ல போகுதுன்னு பார்க்கணும்கிற ஆசை தவிடுபொடியாகிவிட்டது. மீட்டர் ப+ச்சியத்தை தாண்டி அசையவேயில்லை. ‘அடக்கடவுளே , இது வேற வேலை செய்யலையே’
இப்படியிருந்த நேரம் எதிரே பார்க்கிறேன். பெரிய கன்டைனர் ஒன்றை ஓவர்டெக் பண்றான் எதிரிலிருந்து வன் ஒன்று கடக்க வருகிறது. இப்போது சமாந்தரமாக கன்டைனர் எங்கள் பைக் வன் ‘ அய்யோ வண்டி ஓடத்தொடங்கின காலத்திலிருந்து ஒருநாளும் இப்பிடி ஓவர்டேக் பண்ணலேயேடா. அதிகமான திடீர் பயத்தை விளக்குவதற்காக ஈரல்ல தண்ணி இல்ல என்று சொல்வார்கள். இந்த நிலைமையில்தான் இப்பொழுது நான். 

இனிமேலும் பொறுக்க முடியாது. மெதுவாக காதருகே போய் ‘ ஏன் இவ்வளவு பாஸ்டா போற?  மெதுவா போகலாம்தானே. பார்த்தியா மோதப்பார்த்தம்’ என்றேன். ‘பத்து நிமிசம் லேட்டாகிட்டுதானே. எயிட் தேட்டிக்குள்ள போய்ரலாம்’ ‘அடேய் இன்னிக்கு எய்ட் தேட்டிக்குள்ள போய்ரலாம்னு நீ ஓட்டுற ஓட்டுல இனி வாழ்க்கை புல்லாவே வேலைக்கு போக ஏலாம போகப்போதுடா.’ பய கடுப்பாகி மெதுவாக திரும்பி பார்த்துவிட்டு மறுபடியும் முறுக்க ஆரம்பித்தான். பயந்துட்டான்னு நினைச்சமே. மறுபடியும் ஓட்டுறானே. பதினைஞ்சு கிலோமீட்டர் தாண்டியிருந்தது.

சன நெருசல் கூடிய பஜார் ஏரியா. ஸ்கூல் பிள்ளைங்க. வேலைக்கு போறவங்க. கடைக்காரர்கள், வியாபாரிகள் என பிஸியாக இருக்கின்ற ஏரியாவில் நாற்பதுக்குள்ளதான் போக இயலும். ஆனா இங்கயும் ஸ்பீடை குறைக்கமாட்டேங்கிறானே. ‘ நண்பா. நைட் தண்ணியடிச்சியடா?’
ஏன் என்றான். ‘ இல்ல சும்மாதான். நான் கேட்டது ஒருவேளை இரவு போட்ட தண்ணி முறியாம இருந்தாலும் இப்பிடித்தான் மூர்க்கத்தனமாக வண்டி ஓட்ட சொல்லும். இதை அவன்கிட்ட சொல்லலாமா? மனசுக்குள் நினைத்துக்கொண்டேன். அப்படியே போகும்போது ஸ்கூல் ஒன்றின் முன்னால் பாதசாரிகள் கடவை அவ்விடத்தை நெருங்கும்போது பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்கிறான். இரண்டு பிழை மஞ்சள் கடவையில் வேகமாக பயணித்தல் மற்றும் ஓவர்டேக் செய்தல். சடர்ன் பிரேக். முன்னாடி பார்த்தால் வீதியின் நடுவில் நின்றிருந்த டிராபிக் போலீஸ் சற்று தடுமாறினார். மோதி விடுவானுகளோ என்ற பயம். ஒரு மாதிரியாக சமாளிச்சு பிரேக் போட்டு எஸ்கேப் ஆயிட்டம்.  கிரவுட் இல்லைன்னா விசிலடிச்சு துண்டொன்று தந்துருப்பான். சம்பளத்தில பாதி போயிருக்கும். நல்லவேளை.கோர்ண் அடிச்சிகிட்டே வாகனங்கள் கடக்கும்போது அதனுடைய வேகத்தின் காரணமாக காற்று ஒருபக்கம் இழுக்க என்னால் முடியவில்லை.

 இவன்கிட்ட இனி வேலை இல்லை. பேசாம வாகனங்களை ஓவர்டேக் பண்ணும்போது கண்ணை மூடிக்கவேண்டியதுதான். கண்மூடும் மந்திரம் நல்லாவே வேலை செய்தது. கண்ணை முழிச்சா நெட்டில பார்த்த கைகால் முறிஞ்ச , உடல் சக்கையாகிபோன அக்ஸிடென்டெல்லாம் ஞாபகத்துக்கு வருது. ‘ அம்மாடி கண்ணை மூடினாதானே கனவு வரும். இவன் படுத்திறபாட்டில கண்ணை தொறந்தாதானே கனவு வருது. முப்பது கிலோமீட்டர் தாண்டியிருந்தது. இதுவரைக்கும் எங்களை எந்தவொரு வாகனமும் ஓவர்டேக் பண்ணவில்லை. நாங்கள்தான் ஓவர்டேக் பண்ணிக்கொண்டிருந்தோம். இதற்கு முன்னாடியெல்லாம் இந்தமாதிரியான சந்தர்ப்பம் ஏற்பட்டதே கிடையாது. எதிரே சுற்று வளைவு. சிறிதளவு வேகத்தை கம்மி பண்ணி திருப்பினான் பாருங்க. என்னுடைய ஒருபக்கம்; றோட்டில் உராசிய மாதிரி ஒரு பீலிங். அந்தளவுக்கு பைக்கை சாய்த்தான். அப்போது அவன் தோளை இறுக்கிபிடித்தபடி கண்களை மூடிக்கொண்டேன். வளைவு தாண்டியதும் அவன் தோளை தட்டி வண்டியை நிறுத்தச்சொன்னேன். ‘ஆள்நடமாட்டம் இல்லாத ஏரியாவா நித்தாட்டுறன்’ என்றான். ‘நான் ஒண்ணுக்கு போகல்லடா. பஸ்ல வரப்போறன்; லேசாக சிரித்துகொண்டே எனது பேச்சை எள்ளளவும் பொருட்படுத்தாமல் இன்னும் அதிகமாக முறுக்கியமாதிரியே இருந்தது. நான் சீரியஸாத்தன் பஸ்ல போற முடிவு எடுத்தன். இவன் என்னடான்னா சிம்பிளா முறியடிச்சுட்டு போறான். 

ஓடிக்கொண்டிருக்கிறான் இன்னோரு பைக்கை தாண்ட முயல்கிறான். நான் நினைக்கின்றேன் எங்களை விட மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்/அவர் வேகம்தான் முன்னாடி செல்கின்ற பைக் குறைய இருக்கும். பைக் இரண்டும் சமாந்தரமாகிவிட்டது. ஒரு இருபது வயது மதிக்கத்தகக் பையன் ஒருவன் ஓட்டிக்கொண்டிருக்க பின்னால் தேவதை மாதிரி அழகான ஒரு பெண். அவனுடைய அக்காவாத்தான் இருக்கும். அவளும் வேகத்தின் பயத்தில் அவன் தோளை இறுகப்பிடித்திருக்கின்றாள். எதிரே பஸ் ஒன்று வர பைக் இரண்டும் இன்னும் அதிகமாக நெருங்கிவிட்டது. இப்போது அவளை எட்டி கிஸ்ஸடிக்குற தூரம் என்றால் பார்த்துக்குங்களேன் (அடச்சீ… நாறப்பயலே..எங்க போனாலும் இந்த நினைப்பு மட்டும் மாறுதில்ல) அப்பிடியே அவ என்னைப்பார்த்தா… என்ன கண்ணுடாது… பவர் பக்டரி. அப்பிடி ஷாக் அடிச்சுது. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருந்துச்சு.பயம் எல்லாம் மறந்துபோச்சு. கடவுளோட படைப்புகளில் என்னை அதிகம் கவர்ந்தது பாதிச்சதுன்னா அது நிச்சயமாக பெண்கள்தான்.அவ முன்னாடி திரும்பிகிட்டா. குட்டிக்காதல் ஒன்று வந்துவிட்டது. இது எத்தனையாவது என்று ஞாபகம் இல்லை. இவையெல்லாம் நடந்தது ஓரு ஐந்து செகன்டுக்குள். அதற்கிடையில் நண்பன் முறுக்கின முறுக்கில் வண்டி சீறிக்கொண்டு முன்னால் பாய்ந்து சென்றது. திரும்பி பார்க்கிறேன். அவளுக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. அவள் தெரியவில்லை. தம்பிக்காரன் ஒருமாதிரியாக வெறிச்சுப்பார்க்கிறான். முன்னால் திரும்புகிறேன். கவிதையெல்லாhம் வரப்பார்க்குது. நாற்பது கிலோமீட்டர் தாண்டியாச்சு. அலுவலகம் நெருங்கப்போகிறோம் என்கிற நிம்மதி. ஆனா மிச்சம் இருந்த அவ்வளவு கிலோமீட்டரும் காட்டு காட்டுன்னு காட்டிட்டான் நண்பன். பைக்கிலிருந்து இறங்கும்போது மணி 08.20



.

என்னை பொறுத்தவரைக்கும் எழுபது சதவீதத்துக்கு மேலான விபத்துக்கள் அதீத வேகத்தாலேயே ஏற்படுகின்றன. வேகத்தை குறைப்போம் விபத்துக்களை தடுப்போம்.

15 comments:

  1. ஐந்து வினாடிகளில் காதல் - அதிக வேகம் என்றும் ஆபத்து...!

    ReplyDelete
    Replies
    1. சும்மா நச்சுன்னு சொல்லிட்டிங்க தல.

      Delete
  2. நகைச்சுவையுடன் நல்ல கருத்து சொன்னீர்கள். இங்கு வெளிநாடுகளிலும் இதே பிரச்சனை தான்.

    ReplyDelete
    Replies
    1. **நகைச்சுவையுடன் நல்ல கருத்து சொன்னீர்கள். இங்கு வெளிநாடுகளிலும் இதே பிரச்சனை தான்.**

      எல்லோரும் ஒரே இனம்தானே(மனித) மம்.

      Delete
  3. -//
    என்னை பொறுத்தவரைக்கும் எழுபது சதவீதத்துக்கு மேலாகன விபத்துக்கள் அதீத வேகத்தாலேயே ஏற்படுகின்றன. வேகத்தை குறைப்போம் விபத்துக்களை தடுப்போம்.//-என்னை பொறுத்தவரை அந்த 70 % அதி வேகம் , ஆபீஸ் மேல் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தாலே நடக்கிறது . தினம் நேரத்தில் வரும் சக ஊழியர் ஒரு நாள் 10 நிமிடம் லேட்டாக வந்தால் இவர்கள் ஏதோ வேற்று கிரக வாசியை போலே பார்க்கும் பார்வை. assessment review -இல் late chart -ஐ முன் வைக்கும் பாங்கு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா. என்னுடைய ச்சும்மா குனிய வைச்சு குத்தணும் http://vankavasinkajosinka.blogspot.com/2013/03/blog-post_16.html பதிவு யார் மேல் தவறு என்று பதில் தரும் என நினைக்கின்றேன்..

      Delete
  4. http://thiruttusavi.blogspot.in/2013/05/blog-post_17.html

    ReplyDelete
  5. வேகம் விவேகம்

    ReplyDelete
    Replies
    1. வேகத்தில் விவேகம் செல்லாக்காசாகிவிடும். விவேகத்தில் வேகம் …ம்ம்.. எல்லோருக்கும் கிடைக்காத வரம்.

      Delete
  6. பின்னால் அமர்பவர்கள்தான் எப்போது வேகத்தை உணர்கிறார்கள்;ஓட்டுபவர்கள் அல்ல!
    வேகம் விவேகம் அல்லதான்!

    ReplyDelete
  7. 5 வினாடிகளில் காதல் வந்தது உனக்கு ஆபத்து......
    2400 வினாடிகளில் நீங்க போனதும் உங்களுக்கு ஆபத்து......
    உனக்கு கவிதை வந்தது இருக்கே அது எங்களுக்கு ஆபத்து....

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... நம்ம கவிதையை படிச்சு பாருங்க பாஸ் காதல் தானாக வரும்.

      Delete
  8. இறுதியில் விழிப்பு போட்டுள்ளீர்கள். நன்று.

    வேகம ஆபத்துகளை அழைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அந்த விழிப்புக்காகத்தான் மம், மேலே உள்ள மேலே உள்ள மேட்டரெல்லாம்.

      Delete