Sunday, May 12, 2013

7:10 PM
‘ஹலோ. சொல்லுங்க’

‘எங்க நிக்கியள்.’

‘நான்..நான் இங்க பக்கத்திலதான் பொடியனுகளோட சும்மா பேசிட்டு நிக்கன்’

‘அப்போ. வாங்க கோயிலுக்கு போய்ட்டு வருவம்.”

‘ கோயிலுக்கா? நான் வரலை நீங்க போய்ட்டு வாங்க’

‘உங்களை ஒண்ணும் சாமி கும்பிட கூப்பிடல்ல. கூப்பிடவும் மாட்டன். பகுத்தறிவு என்ற பெயரில கடவுள் நம்பிக்கை இல்லைன்னு பீத்திக்கிறது. ஆனா கோயில்ல குடுக்கிற பொங்கல் அன்னதானம் எண்டா முன்னுக்கு நிக்கிற. வெட்கம் இல்லையா உங்களுக்கு?’

‘இப்ப எதுக்கு அதெல்லாம் பேசுற. இப்ப நான் என்ன செய்யணும்?’

‘என்னை கோயிலுக்கு ஏத்திட்டு போங்க’

‘சரி வந்து விட்டுட்டு வாறன்’

‘விட்டுட்டு வாறதா? பிறகு நான் எப்படி வாறது. திரும்ப ஏத்திட்டு வரணும்”

‘அம்மாடி நீ சாமி கும்பிட போனா ஒரு மணிநேரம் ஆகுமேடி’

‘ஒண்ணில்லை. ரூ அவர்ஸ். ப+சை முடியத்தான் வாறம்.;
‘என்னது. ப+சை முடியவா? அதெல்லாம் முடியாது. உன் தம்பியை ஏத்திகொண்டு விடச்சொல்லு’

‘அவனுக்கு கிளாஸ். ஈவினிங்தான் வருவான். இப்ப வரப்போறிங்களா? இல்லையா?; இன்னிக்கு சன்டேதானே ப்ரீயாத்தானே இருப்பியள். சும்மா வெட்டியா பேசிட்டுநிக்கிறதை விட கோயிலுக்கு போற எவ்வளவோ பெட்டர். வேகமாக வாங்க. ரெடியாகிட்டன்’

செல்போன் கட்டானது. போனை பார்த்துக்கொண்டிருந்த சந்ருவின் முகத்தில் ஏகப்பட்ட கடு கடுப்பு.

‘என்னடா.. கோயிலுக்கு போக கூப்பிறாளாடா? போகப்போறியா? அப்போ இதெல்லாம்….’ நண்பன் ஆதங்கமாக இழுக்க ஆரம்பித்தான்.

டென்சாகி தலையை சொறிந்தவாறே கையிலெடுத்த பீர் பாட்டிலை வாயில் வைக்காமல் கீழே வைத்துவிட்டு எழுந்த சந்ரு முணுமுணுத்துக்கொண்டே நகர ஆரம்பித்தான்.

‘சன்டே அதுவுமா ரெண்டு பீர் ஐ போட்டுட்டு ப்ரண்டஸ் கூட ஜாலியா இருக்கலாம்ணு பார்த்தா இப்படி ஆகிபோச்சே. ஒண்ணு லவ்வர் இல்லாம இருக்கணும். இல்லை இந்த போன் இல்லாம இருக்கணும். அப்பதான் பச்சுலர் லைவ்வ என்ஜாய் பண்ணமுடியும்’

சத்தியமாக எனக்கு லவ்வர் இல்லீங்கோ

0 comments:

Post a Comment