Sunday, June 30, 2013

6:23 AM
6
எங்கள் ஊரில் சூரன் வகை மீன் கரைவலையில் பிடிபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்


கரையோர மணலில் கால்கள் புதைந்தெழ
அதிகாலையிலும் நெற்றியில் மார்பில் என
சிறிய வியர்வை கசிய லேசாக மூச்சு வாங்க
வேகமாக நடக்கும்போதுதான் இந்த நினைப்பு

பார்க்க வியக்கும் விந்தை - ரசனையோடு
அதனைச் சுற்றி எத்தனையோர் வாழ்க்கை
பரம்பரை பரம்பரையான வாழ்வாதாரமுண்டு
ஒரு சிலர் வாழ்வை முடித்துக்கொண்டதுமுண்டு.

உன் தரிசனம் கிடைக்காதவர்கள் உன் அழகை ரசிக்க
இங்கே ஓடிவரும்போதுதான் உன் அருமை
எங்களுக்கெல்லாம் புரியும் தருணமாக இருக்கும்
பெருமையடைகிறோம் உன் காற்றுபட வாழ்வதையிட்டு

வானிலை அறிக்கையில் இயற்கை அனர்த்தம்
ஓடோடி வருவோம்  உனது நிலையை அறிய
சீற்றம் கொண்டிருந்தாயானால் நம்புவோம்
இல்லையானால் சாதாரண நாளாகவே அந்நாளும்

நீ கோரமாய் எங்கள் ஊரை பதம்பார்த்தபோதும்
உன்னைவிட்டு யாரும் விலகி ஓடவில்லை
மீண்டும் உன் தயவை நாடி நின்றோம்
தாய் மடி தேடும் சிறு குழந்தைகளாக

யாரோ ஒருவர் சிறிய வயதில் கேட்ட ஞாபகம்
இங்கே எத்தனைபேர் ‘கரையான்’கள் ?
உன்னை நம்பி வாழ்வோருக்கான பெயராம்
எதைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள் பிரிக்காமல்

இந்த கேடுகெட்ட மடையர் கூட்டத்திற்கு
உன் வளத்தை நீ வழங்காதே – தள்ளிப்போ
இல்லையெனில் அனைவரும் சமமாக்க
உன்னுள் எல்லோரையும் சங்கமமாக்கிக்கொள்


6 comments:

  1. வரிகள் அருமை... நன்றாக முடித்துள்ளதும் சிறப்பு...

    படம் வியப்பை தந்தது...!

    ReplyDelete
  2. நன்றி ஐயா! ரெட் லைன் மேட்டர்தான் சொல்லவந்ததும்.

    ReplyDelete
  3. நன்றாக முடித்துள்ளீர்கள்... சிறப்பு...
    வாழ்த்துகள், தொடருங்கள்.

    ReplyDelete
  4. நீ கோரமாய் எங்கள் ஊரை பதம்பார்த்தபோதும்
    உன்னைவிட்டு யாரும் விலகி ஓடவில்லை
    மீண்டும் உன் தயவை நாடி நின்றோம்
    தாய் மடி தேடும் சிறு குழந்தைகளாக

    மனதைத் தொடும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிகள்

      Delete